போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள், கூடுதல் விலை பெறுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் மாமண்டூர் பயண வழி வழித்தட உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு சுகாதாரமின்றி தரமற்ற உணவை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதன் பின்னரும் குறைபாடுகளை சரி செய்யாததால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக அதன் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.