எதிர்கால அரசியல் திட்டம் என்ன?- குலாம் நபி ஆசாத் பதில்

குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு பத்மவிபூஷண் விருது அறிவித்து இருப்பது காங்கிரசுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு வலு சேர்ப்பது போல குலாம் நபி ஆசாத் தனது டுவிட்டர் சுய விவர குறிப்புகளை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அவருடைய எதிர்கால அரசியல் திட்டம் பற்றியும் ஊகங்கள் புறப்பட்டுள்ளன. அவர் ஆளும் கட்சிக்கு தாவுவது எதிர்கால அரசியல் திட்டம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இதையொட்டி குலாம் நபி ஆசாத் பதில் அளித்துள்ளார். அதில் அவர், ‘‘குழப்பத்தை உருவாக்க சிலர் விஷமத்தான பிரசாரங்களை பரப்புகிறார்கள். நான் எனது டுவிட்டர் சுயவிவரத்தில் எதையும் நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. சுய விவரம் முன்பு இருந்ததுபோலத்தான் உள்ளது’’ என்று கூறினார்.

Previous Next

نموذج الاتصال