#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
உங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
ரிஷப ராசி நேயர்களே
புதிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். பொது இடங்களில் கவனமாக பேசவும். உடன்பிறப்புகள் வழியில் சில செலவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மிதுன ராசி நேயர்களே
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தெய்வ சக்தியை அதிகரிக்கவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடக ராசி நேயர்களே
குடும்பத்தில் சிறப்பான ஒரு ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. தூர பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே
பெரியோர்கள் அறிவுரை உதவியாக இருக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். திருமண முயற்சிகள் பலிதமடையவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி ராசி நேயர்களே
குடும்ப நிதி நிலையை உயர்த்த முடியும். தியானத்தால் மனம் ஒரு நிலைபடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
துலாம் ராசி நேயர்களே
வெளிவட்டாரப் பழக்கங்களை அதிகரிக்க முடியும். உடல் நலம் சீராக இருக்கும். உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்ப நலனில் அதிக கவனம் செலுத்தவும். சொந்த பந்தங்கள் உங்களை நாடி வருவர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்ப எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். பேச்சில் தேவையற்ற கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும். மற்றவர்களுடனான மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கும்ப ராசி நேயர்களே
மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நட்பு வழியில் நல்ல தகவல் ஒன்று வரும். மற்றவர்களுக்கு உதவுவதால் நன்மைகள் உண்டாகும். தொழில், வியாபரம் விருத்தியடையும்.
மீன ராசி நேயர்களே
குடும்ப செலவுகளை சரியாக திட்டமிடவும். நாள்பட்ட பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு வரும். மறதி தொல்லை அவ்வப்போது வந்து போகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.