#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப நலன் கருதி செயல்படுவது நல்லது. யாரையும் குறை சொல்லாமல் இருக்கவும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி நேயர்களே
சாமர்த்தியமான பேச்சால் எதையும் சாதிக்க முடியும். நல்ல மனிதர்களின் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுன ராசி நேயர்களே
பல விதத்தில் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கடக ராசி நேயர்களே
குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். வேண்டாதவர்களின் சகவாசத்தை கைவிடவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே
புதிய முயற்சிகள் நற்பலனை தரும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி ராசி நேயர்களே
காரியத்தில் கவனமும், சுறுசுறுப்பும் தேவை. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். எதிர்பாராத செலவுகள் நிறைய வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
துலாம் ராசி நேயர்களே
நீண்ட நாள் முயற்சிகள் கைக்கூடும். யாருடைய தவறையும் சுட்டி காட்ட வேண்டாம். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே
அதிஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதிரிகளின் பலவீனம் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் விருந்தியடையும்.
தனுசு ராசி நேயர்களே
பழமையான விஷயங்களில் ஆர்வம் வரும். எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உடன்பிறப்புகளிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும் காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கும்ப ராசி நேயர்களே
தியானதால் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்களில் சில தடைகள் இருக்கும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தினர் செயல்பாடுகள் சந்தோஷத்தை கொடுக்கும். பண தேவைகள் அதிகளவில் இருக்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும் உத்யோகத்தில் அமைதி நிலவும்.