#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
புதிய கோணத்தில் சவால்களை அணுகுவது நல்ல தீர்வுகளைத் தரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்களே
பெரியோர்கள் அறிவுரை உரிய நேரத்தில் கிடைக்கும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் சிறக்கும்.
மிதுன ராசி நேயர்களே
மனசாட்சிக்கு முரணான செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வருவர். சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கடக ராசி நேயர்களே
பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். உறவினர்கள் மத்தியில் உள்ள பகைமை நீங்கும். சாட்சி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையம்.
சிம்ம ராசி நேயர்களே
குல தெய்வ அருள் கிடைக்கும். யாருடைய விமர்சனத்திற்கும் செவி சாய்க்க வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகும்போது விழிப்புணர்வு முக்கியம். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.
துலாம் ராசி நேயர்களே
பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் சிரமம் இருக்கும். எதிரிகள் விலகியே நிற்பர். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே
புதிய நபர்களின் சந்திப்பால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும். மறைமுக விமர்சனமும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
தனுசு ராசி நேயர்களே
மன கவலைகள் அகலும். புதிய முயற்சிகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே
பொது வாழ்வில் மதிப்பு கூடும். வாக்குறுதிகளைக் கவனமாக அளிப்பது நல்லது. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
கும்ப ராசி நேயர்களே
மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். உணவுக் கட்டுப்பாடு ஆரோக்கியத்திற்கு அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீன ராசி நேயர்களே
ஆன்மீக பலத்தை அதிகரிக்க முடியும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் வரும். யாரையும் முழுவதும் சார்ந்து இருக்க வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.