#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
சொந்த பந்தங்கள் இல்லம் தேடி வருவர். நண்பர்களிடம் விரோதத்தை தவிர்க்கவும். கடன் தொந்தரவுகள் அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
ரிஷப ராசி நேயர்களே
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். கோபதாபங்களை குறைத்துக்கொள்ளவும். முக்கிய வேலைகள் தாமதமின்றி முடிவடையும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுன ராசி நேயர்களே
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். வரவு, செலவுகளில் கவனம் செலுத்தவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடக ராசி நேயர்களே
சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகப் சமாளிக்க முடியும். பெற்றோர்கள் உதவிகரமாக இருப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்ம ராசி நேயர்களே
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும். நண்பர்கள் உதவி கேட்டு வந்து நிற்பர். பயணங்களால் ஆதாயம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பொது காரியங்களில் ஈடுபாடு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம் ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே
திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெரும். புதியவர்களை அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. எடுத்த காரியம் சீக்கிரத்தில் முடியும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் சந்தோஷமான நிலை உருவாகும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கும்ப ராசி நேயர்களே
பொருளாதார நிலை சீராக இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
மீன ராசி நேயர்களே
மனதில் தெளிவும், உற்சாகமும் பிறக்கும். உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.