#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப சிக்கலை சமாளிக்க முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
ரிஷப ராசி நேயர்களே
குடும்பத்தில் வசதிகள் படிப்படியாக உயரும். புது முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மிதுன ராசி நேயர்களே
குடும்பத்தில் திட்டமிடல் அவசியம். பேசும் வார்த்தைகளில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். நெடுந்தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி நேயர்களே
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாலிய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
சிம்ம ராசி நேயர்களே
பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிரிகளின் சதிகளை முறியடிக்க முடியும். உத்யோகத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும்.
கன்னி ராசி நேயர்களே
பல நாள் ஆசையில் ஒன்று விரைவில் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்கானவர்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
துலாம் ராசி நேயர்களே
புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். மன வலிமை அதிகரிக்கும். பெரியவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. புது தொழில் யோகம் அமையும்.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்ப செலவுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும். அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். நம்பியவர்கள் சிலர் எதிராக செயல்படுவர். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
தனுசு ராசி நேயர்களே
வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே
தினசரி செய்யும் தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். உறவினர்களுக்கு உதவி செய்ய நேரிடும். திட்டமிடாத பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே
மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகளை முடிக்க முடியும். பிராத்தனைகளை தாமதிக்காமல் நிறைவேற்றவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். பிரியமானவர்களின் ஆதரவு பெருகும். அடிக்கடி கடன் வாங்குவதை குறைக்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.