#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். மற்றவர்களுடனான மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி நேயர்களே
தெய்வ வழிபாடு சிறப்பாக நடக்கும். வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். நெடுந்தூர பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். தொழில், வியாபாரம், மேன்மையடையும்.
மிதுன ராசி நேயர்களே
எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். உடன்பிறப்புகளின் ஆதரவு பெருகும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
கடக ராசி நேயர்களே
உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
சிம்ம ராசி நேயர்களே
குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். பணம் சேமிப்பு கணிசமான முறையில் உயரும். திருமணம் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம் ராசி நேயர்களே
குடும்பச் சிக்கலையும் எளிதாகத் தீர்க்க முடியும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். வெளிவட்டாரத்தில் வேண்டாத தொடர்புகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே
சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்க முடியும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே
மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். பிரியமானவர்களின் வார்த்தைகள் நம்பிக்கையைத் தரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கும்ப ராசி நேயர்களே
திட்டமிட்ட காரியங்களில் ஜெயிக்க முடியும். நண்பர்கள் மிகவும் உதவியாக இருப்பர். சாட்சி கையப்பமிட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.