#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி நேயர்களே
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்து கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம், மேன்மையடையும்.
மிதுன ராசி நேயர்களே
எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பிரியமானவர்களிடம் உள்ள மனஸ்தாபம் நீங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
கடக ராசி நேயர்களே
குடும்ப ரகசியங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
சிம்ம ராசி நேயர்களே
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்களால் ஆதாயம் இருக்கும். கடன் தொந்தரவு அவ்வப்போது வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
கன்னி ராசி நேயர்களே
அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வந்து நிற்பர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம் ராசி நேயர்களே
குடும்பத்தில் அவரச முடிவுகளை தவிர்க்கவும். உற்றார், உறவினர்கள் இல்லம் நாடி வருவர். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். முன் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே
விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். புது நண்பர்களால் பண விரையம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
மகர ராசி நேயர்களே
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். வெளிநாட்டு சென்று வரும் வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கும்ப ராசி நேயர்களே
அன்றாட தேவைகள் அதிகரிக்கும். நல்லவர்களின் தொடர்பு மன மகிழ்ச்சியையும் தரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீன ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.