#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
மனதில் சந்தோஷமும், நிம்மதியும் அதிகரிக்கும். நண்பர்களிடம் முன் விரோதத்தை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி நேயர்களே
குடும்பத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் நெருக்கடியை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி நேயர்களே
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். எதிரி தொல்லை காணாமல் போகும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
கடக ராசி நேயர்களே
குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே
குடும்பத்தை பற்றிய யோசனை இருக்கும். பண வரவில் சின்ன சிக்கல் வரும். உடன்பிறப்புகளின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நாள்பட்ட பிராத்தனைகள் நிறைவேறும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம் ராசி நேயர்களே
குடும்ப வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பெற்றோர் நலனில் அக்கறைகொள்ளவும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். முன் கோபத்தை குறைப்பது நன்மை தரும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே
மனம் விரும்பிய காரியங்களைச் செய்ய முடியும். உறவினர்களால் சில நெருடல்கள் வரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கும்ப ராசி நேயர்களே
புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீன ராசி நேயர்களே
கடந்த கால நினைவுகள் அடிக்கடி மனதில் வரும். வெளிவட்டாரத்தில் பல நல்ல தொடர்புகள் கிடைக்கும் வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.