#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
செல்வாக்கு மிக்கவர்ககளின் தொடர்பு கிட்டும். யாருடைய தவறையும் சுட்டி காட்ட வேண்டாம். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷப ராசி நேயர்களே
பல நல்ல விஷயங்களில் ஆர்வம் வரும். பணம் வரவில் சின்ன தாமதம் இருக்கும். பாலிய நண்பர்களின் திடீர் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மிதுன ராசி நேயர்களே
வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
கடக ராசி நேயர்களே
குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சிம்ம ராசி நேயர்களே
எப்போதும் இடம், பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். உறவினர்களிடம் இருந்த பகைமை நீங்கும். பயணங்களால் வீண் அலைச்சல் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கன்னி ராசி நேயர்களே
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சிக்கலான காரியங்களை எளிதில் தீர்க்க முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம் ராசி நேயர்களே
ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டுச் செய்யவும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே
மற்றவர்களை குறை சொல்லாமல் இருக்கவும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். திட்டமிடாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை எப்போதும் காப்பாற்ற இயலும். யாருடைய விவகாரத்திலும் தலையிட வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகர ராசி நேயர்களே
குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும். ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்ளவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப ராசி நேயர்களே
வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்கவும். நண்பர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மீன ராசி நேயர்களே
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். இழுபறி வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.