#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். நிதானமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
ரிஷப ராசி நேயர்களே
சுப காரிய செலவுகள் அதிகமாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மிதுன ராசி நேயர்களே
குடும்பத்தில் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே
எதிலும் தீர யோசித்து முடிவு எடுப்பது நல்லது. நண்பர்கள் ஆதரவு வழக்கம் போல் தொடரும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே
பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பண வரவு சொல்லும்படி இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே
குடும்ப பிரச்சனைகள் அகலும். பெரியோர்கள் மூலம் பல நன்மைகள் உண்டு. மிக முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே
தியானம் மன அழுத்தத்தை குறைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளை சமாளிக்கும் துணிச்சல் உண்டாகும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.
விருச்சிக ராசி நேயர்களே
புதிய முயற்சிகள் பலிதமாகும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். தொலைதூரச் செய்திகளால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்பத்தில் பொறுமையாக இருந்து சாதிக்கவும். பழைய பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மகர ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே
மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வாகன பயணங்களில் அலைபேசியை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மீன ராசி நேயர்களே
மனச்சுமை பாதியாக குறையும். வெளிப்படையான பேச்சுக்கள் எப்போது நல்லது. வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.