#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷப ராசி நேயர்களே
நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மிதுன ராசி நேயர்களே
மனதிற்கு பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டாம். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஜெயிக்க முடியும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கடக ராசி நேயர்களே
குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டிவரும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்ம ராசி நேயர்களே
குடும்பத்தில் தன வரவு அதிகரிக்கும். புது சொந்தகளின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
கன்னி ராசி நேயர்களே
எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. பிரியமானவர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம் ராசி நேயர்களே
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிக ராசி நேயர்களே
குடும்பத்தில் அமைதி இருக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
தனுசு ராசி நேயர்களே
தள்ளி போன காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்
மகர ராசி நேயர்களே
தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் அவசர நேரங்களில் கைகொடுப்பர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கும்ப ராசி நேயர்களே
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களுடன் மோதல் வந்து விலகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீன ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.