#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷப ராசி நேயர்களே
எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது முக்கியம். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
மிதுன ராசி நேயர்களே
நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். புது தொழில் யோகம் அமையும்.
கடக ராசி நேயர்களே
ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்
சிம்ம ராசி நேயர்களே
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். கோப தாபங்களை குறைப்பது நன்மை தரும். வீண் செலவுகள் முற்றிலும் கட்டுப்படும். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.
கன்னி ராசி நேயர்களே
நாள்பட்ட பிரச்சனைக்கு தீர்வு வரும். பெற்றோர்களின் அன்பு கிடைக்கும். எதிரிகள் பலமறிந்து செயல்படவும் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
துலாம் ராசி நேயர்களே
அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ளவும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே
மனதில் தேவையற்ற சிந்தனைகள் வேண்டாம். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகர ராசி நேயர்களே
குடும்ப தேவையறிந்து செயல்படவும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்ப ராசி நேயர்களே
சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.