#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப விவகாரங்களில் அதிக கவனம் தேவை. பணத் தேவைகள் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி நேயர்களே
பல நல்ல செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்ட பயணங்களில் நிறைய ஆதாயம் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
மிதுன ராசி நேயர்களே
புதுமையான அணுகுமுறையால் எதையும் சாதிக்க முடியும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பிரியமானவர்களிடம் வீட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே
பலன் தராத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பெற்றோர்கள் ஆதரவும், அரவணைப்பும் எப்போதும் போல் தொடரும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே
குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். முன்கோபத்தை குறைக்கவும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
துலாம் ராசி நேயர்களே
சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். தொடர் வேலைகளால் உடல் சோர்வு ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
விருச்சிக ராசி நேயர்களே
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே
மனதில் தெய்வீக சிந்தனைகள் தோன்றும். சேமிம்பில் அதிக கவனம் தேவை. பிரபலங்களின் அறிமுகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே
திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். யாரையும் குற்றம், குறை சொல்ல வேண்டாம். பெரிய தொகை கடனாக வாங்குவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்ப ராசி நேயர்களே
எதிர்பாராத அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடன்பிறப்புக்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். எதிரிகள் பலம் குறைந்து காணப்படுவர். தொழில், வியாபாரம் விருந்தியடையும்.
மீன ராசி நேயர்களே
மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். சொந்த பந்தங்கள் வழியில் உதவி கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.