#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan
மேஷ ராசி நேயர்களே
குடும்ப பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளிக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷப ராசி நேயர்களே
குடும்பத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கடினமான காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி நேயர்களே
புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
கடக ராசி நேயர்களே
உங்களது பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். நண்பர்களின் செயல்பாடுகள் உற்சாகம் தரும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.
சிம்ம ராசி நேயர்களே
ஆன்மிக ஆர்வம் அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் காரிய அனுகூலம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கன்னி ராசி நேயர்களே
யோசிக்காமல் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். உடன்பிறப்புகளிடம் மனம் விட்டு பேசவும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே
நீங்கள் போட்டு வைத்த திட்டம் நிறைவேறும். உற்றார், உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவர். திருமண காரிய விரைவில் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
விருச்சிக ராசி நேயர்களே
பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
தனுசு ராசி நேயர்களே
குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தன வரவு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். உத்யோகத்தில் கவனமாக செயல்படவும்.
மகர ராசி நேயர்களே
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே
குடும்பத்தில் சாதகமான நிலை உருவாகும். வரவுக்கு மீறிய செலவுகள் நிறைய வரும். அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மீன ராசி நேயர்களே
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்கவும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.