இன்றைய #ராசிபலன் 20 ஜூலை 2026 #மேஷம் முதல் #மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது

#mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #rasipalan2026 #astrology #horoscope #dailyrasipalan 


மேஷ ராசி நேயர்களே

குடும்பத்தைப் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.


ரிஷப ராசி:

செய்யும் காரியத்தில் நிதானமும், செயலில் விவேகமும் தேவை. நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


மிதுன ராசி :

குடும்பத்தினரிடம் அனுசரித்து போவது நல்லது. பெரியோர்கள் நல்ல ஒரு ஒத்துழைப்பை தருவர். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


கடக ராசி :

மனதில் தன்னம்பிக்கை, துணிச்சல் அதிகரிக்கும். முக்கிய நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.


சிம்ம ராசி :

தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


கன்னி ராசி :

எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.


துலாம் ராசி :

எங்கும் எதிலும் வெற்றி வாகை சூட முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செய்தொழில் வியாபாரம் செழிக்கும்.


விருச்சிக ராசி:

சொந்த பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் இருந்த மனவருத்தம் நீங்கும். புது தொழில் யோகம் அமையும்.


தனுசு ராசி:

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் இருக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


மகர ராசி:

ஆன்மீக எண்ணம் மேலோங்கும். பெற்றோர்கள் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். பல காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


கும்ப ராசி:

தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதுமையான விஷயங்களை கவனமாக கையாளவும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.


மீன ராசி:

எல்லா காரியங்களும் தடையின்றி நிறைவேறும். உறவினர்களின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Previous Next

نموذج الاتصال